சமூக தணிக்கை பயிற்சி முகாம்

சிங்கம்புணரியில் சமூக தணிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-08 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் சமூக தணிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேஸ்வரன், மேலாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா வேலை வாய்ப்பு உறுதி அழைப்பு திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை தொடக்க பயிற்சி நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகள், பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது, வேலை திட்டம் மற்றும் பணியாளர்கள் வருகை குறித்த பதிவேடுகள் பராமரித்தல் குறித்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேஸ்வரன் நன்றி கூறினார். இதில், பொறியாளர் இளங்கோ, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்