பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி கிராமத்தில் விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக 3 மாத காலம் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கவிதா முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் அலுவலர் ஞான சந்திரன், பெற்றோர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இதில் எம்.எஸ். இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தலைவர் கோகுலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அழகுக்கலை நிபுணர் கிருஷ்ணவேணி, விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா தேசிய தொண்டர்கள் கோபிநாத், கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.