பயிர்களில் பூச்சி மேலாண்மை பயிற்சி

பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-18 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம், அட்மா திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வான அரண்மனைக்கரை கிராமத்தில் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியினை இளையான்குடி வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா தொடங்கி வைத்தார். மேலும் மழைச்சூழலில் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் அதிகரிக்கும். எனவே, முன்னெச்சரிக்கையாக அவற்றை தடுக்கும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும், சூடோமோனஸ் மூலம் குலை நோய் கட்டுப்படுத்துவது பற்றியும் விளக்கம் அளித்தார். உளவியல் துறை ராஜேஷ், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த முக்கியத்துவம், பாரம்பரிய நெல் சாகுபடி, அதனால் மண்ணிற்கு ஏற்படும் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர் உரத்தின் முக்கியத்துவம், உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அன்புமணி, விவசாயிகளுக்கு அரசு மூலம் கிடைக்கும் மானிய திட்டங்கள் பற்றி கூறினார். முகாமில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திவ்யா, முத்து சரண்யா செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்