மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-29 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டய வகுப்பில் பயின்று வரும் அனைத்து துறை மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அரசின் சார்பில் வழங்கப்படும் கடன் உதவிகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் புவன்குமார் கலந்து கொண்டு பேசினார். முடிவில் பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்