தர்மபுரியில் நாளை போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி

Update: 2022-10-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு, பயிற்சி அளிக்க உள்ளார். இந்த பயிற்சி முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று அரசு கலை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்