'தினத்தந்தி' சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நேற்று தாராபுரத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பாரி, பரிசு வழங்கி பாராட்டினார்.
ஓவியப்போட்டி
'தினத்தந்தி' நாளிதழ் திருப்பூர் பதிப்பின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திறன் விழா என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 'தினத்தந்தி' நாளிதழ் மற்றும் மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம், அனிதா டெக்ஸ்காட் இணைந்து ஓவியப்போட்டியை தாராபுரத்தில் நேற்று நடத்தியது.
போட்டியின் அசோசியேட் ஸ்பான்சர்களாக எபிக் கிளாத்திங் கோ, தாராபுரம் எம்.எம்.மருத்துவமனை, தாராபுரம் வி.எஸ்.என்.அரிசி ஆலை, ஸ்ரீதிருப்பதி வெங்கடேஸ்வரா ஜவுளிக்கடை ஆகியவை இருந்தன. இந்த ஓவியப்போட்டி தாராபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தேன்மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
ஆர்வத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
காலை 7.30 மணி முதல் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 4-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். 1 மணி நேரம் ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஏ.பாரிபங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தாராபுரம் மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் பி.சுப்பிரமணியன், அனிதா டெக்ஸ்காட் குழுமத்தின் இயக்குனர் ஏ.சந்திரசேகர், தேன் மலர் மேல்நிலைப்பள்ளி நிறுவன தலைவர் ஆர்.தண்டபாணி ஆகியோர்முன்னிலை வகித்தனர். தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுதனராசு, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இலவச மரக்கன்றுகள்
விழாவில் எம்.எம். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எ.ரசூல் பகத், எபிக் கிளாத்திங் கோ நிர்வாக இயக்குனர் என்.செல்லமுத்து, யெங் செம் கூடைப்பந்து கழக தலைவர் பரத்சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை 'தினத்தந்தி' திருப்பூர் பதிப்பு மேலாளர் ஏ.மைக்கேல் சுவாமிதாஸ் வரவேற்றார். முடிவில் தேன்மலர் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் டி.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அனிதா டெக்ஸ்காட் குழுமத்தின் சார்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.