ரெயிலில் அடிபட்டு ஆந்திர மாநில என்ஜினீயரிங் மாணவர் சாவு

கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு ஆந்திர மாநில என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

Update: 2022-11-12 20:27 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே ரெயிலில் அடிபட்டு ஆந்திர மாநில என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

ஆந்திர மாநில மாணவர்

ஆந்திர மாநிலம் குண்டூர், கரெம்புடிமண்டலம் பகுதியை சேர்ந்தவர் நல்லபோதுலா சீனு. இவருடைய மகன் நல்லபோதுலாரங்கையா (வயது 18). இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று நல்லபோதுலாரங்கையா கும்பகோணம் ரெயில் நிலையம் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது உடலை கும்பகோணம் ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மாணவனின் இறப்பு குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து நேற்று காலை கும்பகோணத்துக்கு வந்த நல்லபோதுலாரங்கையாவின் பெற்றோர் தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கும்பகோணம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர்.இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்