மாயமான திருப்பனந்தாள் டிரைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது அம்பலம்

கர்நாடக மாநிலத்துக்கு சென்று மாயமான திருப்பனந்தாள் டிரைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது அம்பலமாகி உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Update: 2023-06-30 20:21 GMT

திருப்பனந்தாள்,

கர்நாடக மாநிலத்துக்கு சென்று மாயமான திருப்பனந்தாள் டிரைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது அம்பலமாகி உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

கர்நாடகாவுக்கு சென்றார்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே விளத்துரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது34). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். ராஜ்குமார் கடந்த 1-ந் தேதி சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு டிரைவரான மோகனுடன் சென்றார்.கர்நாடக மாநிலம் தாவுஸ்பேட் அருகே டீ குடிப்பதற்காக இறங்கிய ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் லாரி உரிமையாளர் சுப்பிரமணியத்திடம் மற்றொரு டிரைவரான மோகன் தகவல் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ரெயிலில் அடிபட்டு சாவு

ராஜ்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மனைவி செல்வி திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார், லாரி உரிமையாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது அவர் சரியான தகவல் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சேலம் போலீஸ் உதவியுடன் திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கர்நாடகா மாநிலம் தாவுஸ் பேட் அருகே ரெயிலில் அடிபட்டு ராஜ்குமார் இறந்ததும் அவரை பற்றி தகவல்கள் தெரியாததால் 13 நாட்களாக உடல் அங்குள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்ததும், பின்னர் அடையாளம் தெரியாத நபராக கருதி உடல் அடக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனால் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்