சென்னையில் ரெயில் தடம் புரண்டு விபத்து

தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2023-12-15 11:55 GMT

சென்னை,

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றபோது ரெயிலின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளது. பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதால், ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ரெயில் விபத்தால் மற்ற ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Tags:    

மேலும் செய்திகள்