நாகப்பட்டினத்தில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 2,000 டன் நெல் வந்தது

Update: 2023-03-16 18:45 GMT

தர்மபுரி:

நாகப்பட்டினத்தில் இருந்து தர்மபுரிக்கு 2,000 டன் நெல் சரக்கு ரெயில் மூலம் வந்தது. இந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பணியை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நெல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளில் அரவை செய்யப்பட்டு, பின்னர் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் செய்திகள்