சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-25 20:00 GMT


மதுரையில் இருந்து செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்சேவை இந்த மாத இறுதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, இந்த ரெயிலின் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை-செகந்திராபாத் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.07192) மதுரையில் இருந்து வருகிற 3-ந் தேதி, 10, 17, 24-ந் தேதி புதன்கிழமைதோறும் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணா மலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிர்லியாகுடா, நளகொண்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் மாறுபடும். குறைந்த இருக்கைகள் இருந்தால், அதிக கட்டணம் வசூலிக்கப்படும். மதுரையில் இருந்து செகந்திராபாத்துக்கு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.720 வசூலிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்