ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Update: 2022-05-29 23:52 GMT

உடுமலை

உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ரெயில் பயணம்

வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில்பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. உடுமலையை பொறுத்தவரை, பாலக்காடு-திருச்செந்தூர், பாலக்காடு-சென்னை, கோவை-மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்கள் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை வாராந்திர சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மறுமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

உடுமலை வழியாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.அதிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது.

இதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.அதன்படி நேற்று பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.அதனால், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறிய பயணிகள் பலர் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனர்.அவர்கள் பழனி உள்ளிட்ட அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் பயணிகள் இறங்கும் போது தங்களுக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர்.இந்த நிலையில்திருச்செந்தூர் உள்ளிட்டதென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிளாட்பாரத்தில் மேற்கூரை

உடுமலை ரெயில் நிலையத்தில், ரெயிலுக்காக பயணிகள் காத்திருக்கும் பகுதியில் ரெயில் நிலைய அலுவலத்திற்கு முன்பு பிளாட்பாரம் பகுதியில் சிறிதளவு இடத்தில் மட்டுமே மேற்கூரைஉள்ளது.பிளாட்பாரம் நீளமாக இருந்தும் அங்கு நீண்ட தூரத்திற்கு மேற்கூரை இல்லை.அதனால் மழை காலங்களில் ரெயில் வரும்வரை பயணிகள், சிறிய அளவில் உள்ள மேற்கூரைக்கு கீழேயே இட நெருக்கடியான இடத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.ரெயில் வந்ததும் ரெயிலில் இடம்பிடிப்பதற்காக மழையில் நனைந்து கொண்டே வேகவேகமாக செல்ல வேண்டியுள்ளது.மழை இல்லாத பகல் நேரங்களில், மேற்கூரை இல்லாத இடத்தில் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் மேற்கூரைகளை விஸ்தரிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்