சாலையில் மயங்கி கிடந்தபோது பரிதாபம்: வாகனம் ஏறி தலை நசுங்கி வாலிபர் பலி

சாலையில் மயங்கி கிடந்தபோது வாகனம் ஏறி தலை நசுங்கி வாலிபர் பலியானார்.

Update: 2023-04-02 18:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் தமிழழகன் (வயது 21). இவர் நேற்று அதிகாலை பெருங்களூர் அருகே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ெசன்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்