மேலூர் அருகே பரிதாபம்: வீட்டில் விளையாடிய 1½ வயது குழந்தை தண்ணீர் அண்டாவில் விழுந்து பலி

மேலூர் அருகே வீட்டில் விளையாடிய 1½ வயது குழந்தை தண்ணீர் அண்டாவில் விழுந்து பலியானது

Update: 2023-01-07 20:06 GMT

மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டியை சேர்ந்தவர் கல்லானை. இவருடைய மனைவி மீனா. இவர்களது 1½ வயது குழந்தை தனியாஸ்ரீ.  இந்த நிலையில், தனியாஸ்ரீயுடன் மீனா, மேலூர் அருகே பட்டூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வீட்டுக்கு வெளியே விளையாடிய குழந்தை, அங்கிருந்த தண்ணீர் அண்டாவில் தவறிவிழுந்து விட்டது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்சில் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் குழந்தை தனியாஸ்ரீ பரிதாபமாக இறந்தது.

இந்த சோக சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்