மதுரை அருகே சோகம்: காதல் வயப்பட்ட பிளஸ்-2 மாணவன்,மாணவி அடுத்தடுத்து தற்கொலை

காதலித்து வந்த பிளஸ்-2 மாணவனும், மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-05-15 20:13 GMT

அலங்காநல்லூர்

காதலித்து வந்த பிளஸ்-2 மாணவனும், மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவன்-மாணவி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர், முருகேசன். இவருடைய மகன் வீரபத்திரன் (வயது 17). முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டார். வீரபத்திரன் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகள் பவானி (17).

வீரபத்திரனும், பவானியும் பாலமேட்டில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. வீரபத்திரன் தனது காதலியான பவானியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று தன் தாயாரிடம் அறிமுகப்படுத்தி, திருமணம் குறித்த விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவருடைய தாயார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மாணவன், மாணவி தற்கொலை

இதனால் மனவருத்தம் அடைந்த வீரபத்திரன், பவானியை அவரது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீரபத்திரன் திடீரென தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிைடயே தனது காதலனின் தற்கொலை குறித்து பவானிக்கும் தெரியவந்தது. அவர் சோகம் அடைந்தார்.

நேற்று மதியம் தனது தோட்டத்து வீட்டிற்கு சென்று அங்கு பவானியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மாணவன், மாணவியின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், மாணவியின் உடல் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன..

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்