கஞ்சா கடத்திய 5 பேர் கைது
திருமங்கலத்தில் கஞ்சா கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் கஞ்சா கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் வாகன சோதனை
திருமங்கலம் நகர் போலீசார் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தாழை முத்தையா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் அவர்கள் மீது மேலும் சந்கேதம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்டனர். அப்போது அந்த மோட்டார்சைக்கிள்களில் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சிவகுமார் (வயது 42), பொம்மனம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி(55). காளப்பன் பட்டி கருப்பசாமி(22), அழகு ரெட்டிபட்டி வல்லரசு(23) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 5 செல்போன்கள், இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிவகுமார், சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.