காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-16 18:35 GMT

பெங்களூருவில் இருந்து 360 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கை நீளமான லாரி ஒன்றில் ஏற்றப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் சென்றபோது லாரி திரும்ப முடியாமல் நின்றது. அதேபோல் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி நீளமான காற்றாலை விசிறி இறக்கையை ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சென்றது. அதனால் அந்த லாரியை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாமல் பின் தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரு சர்வீஸ் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக அங்கிருந்து சென்றன. இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரையும், அதேபோல் பாலத்துறையில் இருந்து தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார்கள், பஸ்களில் பயணம் செய்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்