போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கீழ்பாக்கம் தாசப்பிரகாஷ் சந்திப்பில் இருந்து, சென்டிரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பில், வேப்பேரி சிக்னல் அருகில் (கமிஷனர் அலுவலகம் அருகே) பள்ளம் தோண்டி, மழை நீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சனிக்கிழமை (நாளை) இரவு 10 மணி முதல், திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
1.ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில், காந்தி இர்வின் பாலம் சந்திப்பில் இருந்து, தாசப்பிரகாஷ் நோக்கி வாகனங்கள் செல்லலாம். 2.ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில், நாயர் பாலம் சந்திப்பில் இருந்து, சென்டிரல் நோக்கி வாகனங்கள் போக அனுமதி இல்லை. இந்த வாகனங்கள், நாயர் பாலம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி, உடுப்பி சந்திப்பில் இடது பக்கம் திரும்பி, எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக, காந்தி இர்வின் பாலம் சென்று, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை வந்து, வலதுபுறம் திரும்பி சென்டிரல் போகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.