மினி பஸ்களை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்களால் போக்குவரத்து நெரிசல்

மினி பஸ்களை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-10-20 20:12 GMT

துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 மினி பஸ்கள் கீரம்பூர் வழித்தடத்தில் புறப்பட்டு சென்றன. இந்த நிலையில் இரு பஸ் டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் 2 பஸ்களையும் துறையூர் - திருச்சி பிரதான சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுந்து நின்றன. ஆனால் போலீசார் உடனடியாக வந்து போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் துறையூர் பகுதியில் இயங்கும் ஒரு சில தனியார் மினி பஸ்கள் உரிய வழித்தடங்களில் இயங்காமல், அவர்களுடைய இஷ்டத்திற்கு தகுந்தற்போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்