ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து ெநரிசல்

ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது.

Update: 2023-09-24 20:31 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி, தளவாய்புரம், முகவூர் மெயின் சாலையில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். இவற்றில் வணிக கடைகளுக்கு வரும் வாகனங்களும் நிறுத்தப்படுவதால் பள்ளி விடும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். சைக்கிளில் வரும் மாணவர்கள் ஒதுங்க வழியின்றி விபத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சாலையில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் தான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். இப்பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்