மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி போலீசார் நகரில் நாளை(வெள்ளிக்கிழமை) பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி போலீசார் நகரில் நாளை(வெள்ளிக்கிழமை) பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
மதுரையில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை (5-ந் தேதி) காலை ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழியிலும், ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஓபுளா படித்துறை வைகை தென்கரை பகுதி மற்றும் வைகை வடகரைகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.
தென்கரையில் இருந்து எந்த வாகனமும் ஏ.வி..பாலம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வைகை வடகரைக்கு வர அனுமதி இல்லை.
புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் நகரின் பிற பகுதிகளிலிருந்து வரும் கார் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகனங்களை, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தம் செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை
பச்சை நிறம் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகனங்களை ஏ.வி. பாலத்தில் தெற்குபக்கம் நுழைவு வாயிலில் நிறுத்திக்கொள்ளலாம். மேலும் வாகனங்கள் பெரியார் சிலை, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, காமராசர் சாலை, முனிச்சாலை - ஓபுளாபடித்துறை சந்திப்பு, அம்சவல்லி சந்திப்பு, கீழ வெளி வீதி - நெல்பேட்டை, அண்ணா சிலை, ஏ.வி.பாலம் தெற்கு பக்க நுழைவு நிறுத்தம். பின்னர் அந்த வாகனங்கள் ஏ.வி.பாலம், அண்ணாசிலை கிழக்குவாசல் சந்திப்பு வழியாக வெளியே செல்லலாம்.
ஊதா நிறம் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். அவர்கள் பெரியார் சிலை, காந்தி மியூசியம் ரோடு, கலெக்டர் ஆபிஸ் ரோடு, அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி, ஆவின் சந்திப்பு வழியாக வெளியே செல்லலாம்.
சிம்மக்கல், கீழவாசல் பகுதிக்கு...
புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டில் இருந்து கீழவாசல், சிம்மக்கல் மார்க்கமாக செல்ல வேண்டிய அரசு பஸ்கள், கனரக வாகனங்கள். ரேஸ்கோர்ஸ் ரோடு, நத்தம் ரோடு சந்திப்பு, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, நீதிமன்றம், கே.கே.நகர், ஆர்.கே.கே.நகர் ரோடு. ஆவின் சந்திப்பு. அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, கணேஷ் தியேட்டர் சந்திப்பு, காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாக செல்ல வேண்டும்.
அழகர்கோவில் ரோட்டிற்கு...
பெரியார் பஸ் நிலையத்திலிருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மஹால் ரோடு, கீழவாசல் சந்திப்பு, காமராஜர் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ரோடு, கே.கே.நகர் ஆர்ச், மேலூர் ரோடு, புதூர் சர்வேயர்காலனி 120 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
தத்தனேரி ரோட்டிலிருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலுர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் எல்.ஐ.சி. சந்திப்பு, குலமங்கலம் ரோடு. செல்லூர் 60 அடி ரோடு, பி.டி.ராஜன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
கள்ளழகரை எதிர் சேவையின் போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை கோகலே ரோடு, திருமுக்குலம் ரோடு, அப்துல் பழைய அக்ரஹாரம் தெரு, கபார்கான் தெரு, லாலா லஜபதிராய் ரோடு, செவன்த்டே ஸ்கூல் மைதானம், அல் அமீன் பள்ளி மைதானம், எல்.பி.என்.பள்ளி மைதானம், ஐ.டி.ஐ.மைதானம், புதூர் சேத்தனா பள்ளி மைதானம், ஒய்.எம்.சி.ஏ.பள்ளி மைதானம், மேரியான் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை காந்தி மியூசியம் மைதானம், டாக்டர் தங்கராஜ் சாலை, ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மைதானம், காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி மைதானம், சாய்ராம் பள்ளி, பொதுப்பணித்துறை அலுவலகம், தமுக்கம் மைதான வாகன நிறுத்தம், பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி ரவுண்டானா வரை, வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.
மேலும், நகருக்குள் கீழவெளி வீதியில் அம்சவள்ளி சந்திப்பு முதல் கீழவாசல் வரையிலும், கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரையிலும் வடக்கு மாசி வீதியிலும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
வாகனங்கள் அனுமதி இல்லை
அம்சவல்லி சந்திப்பிலிருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை அனுமதி சீட்டு உள்ள வாகனங்களை தவிர வேறு எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.
அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை அண்ணா பஸ் நிலையம் முதல் கோரிப்பாளையம் வரை மற்றும் பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி ரவுண்டானா முதல் கோரிப்பாளையம் வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.