போக்குவரத்து விழிப்புணர்வு வாரம்
திருப்பத்தூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உட்கோட்ட காவல் துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த பொதுமக்களுக்கு இனிப்பு, பேனா மற்றும் டிபன் பாக்ஸ்களை போலீசார் வழங்கினர்.
இந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷணன் தெரிவித்தார்.