போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'குட்டி காவலர்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்து பொதுமக்களிடையே மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.
அப்போது வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தகூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்க கூடாது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியை சத்தியா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.