பாரம்பரிய உணவு திருவிழா

பாரம்பரிய உணவு திருவிழா

Update: 2022-10-07 20:29 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வெங்கடேஸ்வரன் குத்துவிளக்கு ஏற்றினார். உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி சந்திரலேகா என்ற மாணவி பல ஆண்டுகளுக்கு முன்பு நாமெல்லாம் ருசித்து சாப்பிட்ட கமர்கட், சவ்மிட்டாய், சீனி மிட்டாய், தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூடம் மிட்டாய் என்று விதவிதமான மிட்டாய்களை தயார் செய்து வைத்து இருந்தார். இதேபோல ஒரு மாணவன் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக மண்பானையில் பழைய சாதத்தை கண்காட்சியில் இடம்பெற செய்தார். நிலக்கடலை லட்டு, வெந்தய வடை, வாழைப்பூ வடை என்று வித விதமான பாரம்பரிய உணவு தயார் செய்து அசத்தினார்கள். கண்காட்சியில் இடம் பெற்ற பாரம்பரிய உணவும், அதன் பயனையும் பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினார்கள். முடிவில் தமிழ் துறை தலைவர் பரிமளா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்