பாரம்பரிய உணவு திருவிழா

குத்தாலம் அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

Update: 2022-07-10 16:53 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கிகூறினார்.ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனைவருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்