நெல்லையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-10 18:45 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கவுரவ தலைவர் பிச்சைராஜ், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறு வணிகர்களை வதைக்கும் மின்கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும். மின்சாரவாரியம் முன் வைப்புத்தொகை (டெபாசிட்) பெறுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் காமாட்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் முத்துகுமார், மாநில செயலாளர்கள் முத்துக்குட்டி, முருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன், மாவட்ட தலைவர் ராகசேகர், துணைத்தலைவர் மணிகண்டன், சென்னை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஜெபக்குமார், சுரண்டை ராமர், முகமது ராஜா, பாலா, பிரகாஷ், கண்ணன், கார்த்திகேயன், முருகன், பொன் பெருமாள், பொன் சசிகலா, குமரேசன், முத்துகுமார், மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்