வியாபாரி கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Update: 2022-09-05 18:59 GMT

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்குணசேவியர் (வயது 34). வியாபாரி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (29) என்பவரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த பரமசிவத்தை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்