கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-30 20:23 GMT

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டார். இதில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடந்த 30 வருடங்களாக நடத்தப்பட்டு வந்த நடைபாதை கடைகளுக்கு தடைவிதித்து, அவற்றை அப்புறப்படுத்திய மாநகராட்சியை கண்டித்து, திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோட்ட அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோ-அபிஷேகபுரம் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்