வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-02 18:45 GMT

உடன்குடி:

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.

பேரவை மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். உடன்குடி கிளை தலைவர் ராம்குமார், துணைபொருளாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேரவை மாநில தலைவர் இ.முத்துக்குமார், மாநில செயலர் முத்துக்குடி ஆகியோர் பங்கேற்று பேசினார். டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில் சுதேசி வணிகர்களை வதைக்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும், உணவுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை முழுமையாக நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிச.20-ந் தேதி சென்னையில் கவனஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 50 வாகனங்களில் வியாபாரிகள் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்