நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்

Update: 2023-01-08 18:45 GMT

ஞாயிற்றுக்கிழமைமையையொட்டி நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர். வஞ்சிரம் மீன் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு, 700 விசைப்படகுகள் கடலுக்குச்சென்று மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கரை திரும்பினர். அவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நாகை துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்தனர்.

வஞ்சிரம் கிலோ ரூ.600 முதல் ரூ.800

இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி சென்றனர். அப்போது வஞ்சிரம் மீன் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

கடல் விரா ரூ.550, வாவல் ரூ.750, பாறை ரூ.450, சீலா ரூ.350, போத்தல் ரூ.500, இறால் சிறிய வகை ரூ.350, ஏற்றுமதி ரக சிங்கி இறால் கிலோ ரூ.4 ஆயிரத்து 500, நண்டு கிலோ ரூ.450, ஊசி கனவா மற்றும் பெரிய கனவா ரூ.650 என விற்பனையானது. குறைந்த அளவிலே படகுகள் கரை திரும்பிய நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் நேற்று மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்கள் வாங்க குவிந்ததால் நாகை மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்