மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார்.
கொடைரோடு அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). வெங்காய வியாபாரி. நேற்று இவர், திண்டுக்கல்லில் இருந்து மொபட்டில் ஊத்துப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தி்ண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், ஊத்துப்பட்டி பிரிவில் வந்தபோது ரோட்டை அவர் கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.