அரசு பஸ் மோதி வியாபாரி பலி
பழனி அருகே, மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
பழனி அருகே உள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் சாலை சாய்பு (வயது 31). இவர், கோவில் திருவிழாக்களில் தற்காலிக கடை அமைத்து பொம்மை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். அதன்படி கொழுமத்தில் நடைபெறும் திருவிழாவில் பொம்மை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை அமைத்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு இவர், மோட்டார் சைக்கிளில் ஆயக்குடியில் இருந்து கொழுமம் நோக்கி சென்றார்.
பழனி காரமடை அருகே வந்தபோது, பழனி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.