பஸ் மோதி வியாபாரி பலி

ரத்தினகிரி அருகே பஸ் மோதி வியாபாரி பலியானார்.

Update: 2022-09-09 18:22 GMT

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர்ஷரீப். இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜாபர் ஷரீப் மேல்விஷாரம் பகுதியிலுள்ள நந்தியாலம் கூட்ரோடு சந்திப்பில் சாலையைக் கடக்க மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்ற பஸ் ஜாபர் ஷரீப் மீது மோதியது. இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்