மின்னல் தாக்கி வியாபாரி பலி

மின்னல் தாக்கி வியாபாரி பலியானார்.

Update: 2023-04-28 18:59 GMT


விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 26). பால் பாக்கெட் வியாபாரம் செய்யும் இவர் நேற்று மதியம் சூலக்கரை மாத்தி நாயக்கன்பட்டி ரோட்டில் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு பால் பாக்கெட் வினியோகம் செய்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுபற்றி சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்