தீக்குளித்து வியாபாரி தற்கொலை

கோவை அருகே தீக்குளித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-10 19:45 GMT

கோவை

கோவை அருகே காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 42). மர வியாபாரி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்த தால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அப்துல்ரகுமான், வெள்ளலூர், அவுசிங் யூனிட்டில் தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவி இளைய மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அப்துல் ரகுமான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அப்துல் ரகுமான் இறந்தார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்