வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையார்புரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.