தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-12 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள உரப்பனவிளையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது57), வியாபாரி. இவர் திங்கள்சந்தையில் மிட்டாய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். அத்துடன் வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்