அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தபால் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலா, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.