தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-27 19:47 GMT

நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நிர்வாகி தர்மன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், ஜனநாயக உரிமை பற்றி பேசிய எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்ததை கண்டித்தும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச.நிர்வாகிகள் முருகன், மைக்கல் நெல்சன், மகாவிஷ்ணு, எபினேசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்