தூய்மை பணிக்காக4 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள்சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

தூய்மை பணிக்காக 4 ஊராட்சிகளுக்கு சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் டிராக்டர்களை வழங்கினார்.

Update: 2023-04-13 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூட்டை, அரசம்பட்டு, தேவபாண்டலம், வீரியூர் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்வதற்காக டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆவின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைதலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வ கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலா ரூ.26 லட்சம் மதிப்பில் 4 டிராக்டர்களின் சாவியை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், அந்தோணியம்மாள், தனபால், பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீவா கொளஞ்சியப்பன், வாசுகி கருணாநிதி, கோவிந்தம்மாள், அலெக்சாண்டர், பாப்பாத்தி நடராஜன், அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகா வீரமணி, சரோஜா, ராஜா, ஆரோக்கிய மார்சல் ரோச், தனவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்