மணலுடன் டிராக்டர் பறிமுதல்
திருப்புல்லாணி அருகே மணலுடன் டிராக்டர் பறிமுதல் ெசய்யப்பட்டது.
திருப்புல்லாணி அருகே உள்ள வீரன்வலசை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுடுகாட்டின் அருகில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்தனர். அவர்களை விரட்டி சென்று பிடிப்பதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் டிராக்டரை போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பாக வீரன்வலசை ராமையா மகன் சிலம்பரசன், பொக்காரேந்தல் ஆறுமுகம் மகன் பிரபு ஆகியோரை தேடிவருகின்றனர்.