அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம் அருகே ஆதனூர் தூண்டி வீரன் கோவில் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சவுடு மண் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது எந்தவித அனுமதியும் இன்றி மண் ஏற்றி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த சுதாகரை (வயது36) கைது செய்தனர்.