டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

மங்கலம் அருகே ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-29 12:48 GMT

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45), விவசாயி. இவர் மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலை கானாலாபாடி ஏரிக்கரை ஓரமாக டிராக்டரை ஓட்டி சென்றார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் ஏரியில் கவிழ்ந்தது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்