புன்னையாபுரம் பஞ்சாயத்துக்கு டிராக்டர்

புன்னையாபுரம் பஞ்சாயத்துக்கு குப்பைகளை சேகரிப்பதற்கு டிராக்டர் வழங்கப்பட்டது.

Update: 2022-09-03 14:19 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் கிராம பஞ்சாயத்துக்கு குப்பைகளை சேகரிப்பதற்கும், கிராம பஞ்சாயத்து பணிகளை மேற்கொள்வதற்கும் ரூ.1.50 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை தலைமை தாங்கி, டிராக்டரை வழங்கினார். யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், புன்னையாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் திருமலை வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் திலகவதி கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தொழிலதிபர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் தங்கத்துரை, நயினாரகரம் ஊராட்சி செயலாளர் மாரியப்பன் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, நாராயணன், அனுராதா, தேவிகா, சுதா ராணி, கணேசன், மகேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யூனியன் கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்