தூய்மை இந்தியா திட்டத்தில் 4 ஊராட்சிகளுக்கு டிராக்டர்
தூய்மை இந்தியா திட்டத்தில் 4 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பைகளை அள்ளுதல் மற்றும் பிற பணிகளுக்கு டிராக்டர் வழங்க தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்படி, உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோகிலாபுரம், நாகையகவுண்டன்பட்டி, தே.மீனாட்சிபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி, உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், செண்பகவல்லி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், ஒன்றியக்குழு தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் கலந்துகொண்டு, டிராக்டர் சாவியை, அந்தந்த ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் கருப்பையா (கோகிலாபுரம்), தீபா (நாகையகவுண்டன்பட்டி), மல்லிகா (தே.மீனாட்சிபுரம்) மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர்.