தூய்மை பாரத இயக்க திட்டத்தில் 2 ஊராட்சிகளுக்கு டிராக்டர்

குத்தாலத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் 2 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது

Update: 2023-04-12 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலங்காடு, மாதிரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்க நிதி மற்றும் 15 -வது மானிய நிதி ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு 2 ஊராட்சிகளுக்கான டிராக்டர்களை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது தி.மு.க. குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கதம்பவள்ளி சின்னையன், பிச்சமுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜவள்ளி பாலமுருகன், லட்சுமி செல்வம்,வடக்கு ஒன்றிய பொருளாளர் வெடி பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்