டிராக்டர் கலப்பையில் சிக்கி டிரைவர் பலி

தீவட்டிப்பட்டி அருகே டிராக்டர் கலப்பையில் சிக்கி டிரைவர் பலியானார்.

Update: 2023-05-24 19:53 GMT

கருப்பூர்

ஓமலூர் அருகே உள்ள கே.மோரூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் முருகன் (வயது 40), டிராக்டர் டிரைவர். இவர் கே.மோரூர், ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்த சரவணன் (42) என்பவரின் விவசாய தோட்டத்தில் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது டிராக்டர் திடீரென பழுதாகி உள்ளது. இதையடுத்து டிராக்டர் பின்புறம் ஏர் கலப்பைக்கும், டிராக்டருக்கும் நடுவில் அமர்ந்து பழுதை சரிபார்க்கும் பணியில் முருகன் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் நகர்ந்ததால், ஏர் உழும் கலப்பையில் சிக்கிக்கொண்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்