மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-08-13 17:30 GMT

தோகைமலை அருகே உள்ள மூட்டக்காம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மருதைதுரை (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாகாளிப்பட்டியில் இருந்து கழுகூர் அ.உடையாபட்டி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சங்ககவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (37) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், மருதைதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மருதைதுரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மருதைதுரையின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் பொன்னுசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்