மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் துணை தாசில்தார் நிர்மல் குமார் ேராந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தும்படி கூறினார். அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து டிராக்டரை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து தாசில்தார் நிர்மல் குமார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.