டிராக்டர்-சரக்கு வேன் மோதல்; 4 பேர் படுகாயம்

இலுப்பூர் அருகே டிராக்டரும், சரக்கு வேனும் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-07-21 18:38 GMT

அன்னவாசல்

4 பேர் படுகாயம்

அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டிமணி. இவர் சரக்கு வேனில், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் மணப்பாறையில் இருந்து கீழக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். சரக்கு வேனை பாண்டிமணி ஓட்டினார். இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டி புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் வந்த போது எதிரே இலுப்பூர் பிங்கினிப்பட்டியை சேர்ந்த மூக்கையா (54) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரும், சரக்கு வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு வேனில் வந்த பாசிப்பட்டியை சேர்ந்த மூக்கையா (82), கீழக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் பாண்டிமணி (29), மதி (42), கருப்பையா (75) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மூக்கையா (54) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்